Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்
සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

Homeசேவைகளபிரிவினைவாத சேவைகள்

பிரிவினைவாத சேவைகள்

Sectional Servicesநிர்வாகம்

  • ஆட்சேர்பு
  • பதவியேற்றம்
  • நியமனத்தை உறுதிபபடுத்தல்
  • சேவை நீடிப்பு
  • விடுவித்தல்
    ஓய்வு பெறச்செய்தல்
  • வெளிநாட்டு புலமைபரிசில்கள் வழங்கல்
  • அமைச்சு மற்றும் அதற்கு கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகள்
  • வழக்குகளுக்கு தொடர்பாக தோற்றல்.
  • மனித வள அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள்
  • அமைச்சு மற்றும் அதற்கு கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான எல்லா நிர்வாக நடவடிக்கைகளும்
  • நிறுவன மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்பூட்டல்

திட்டமிடல் பிரிவு

  • அமைச்சுக்கு கீழ் வரும் திணைக்களங்கள், சபைகள் மற்றும் அதிகார சபைகளின் அபிவிருத்தி திட்டமிடல்களை நிதியியல் அதிகார சபை மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களின் வழிகாட்டல்களின் படி தயாரிக்க அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுத்தல், நடைமுறை படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் இடையில் திருத்தங்கள் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தல்.
  • ஒவ்வொறு திணைக்களங்களில் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் பின்னூட்டல்.
  • அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைபடுத்தும் போது தர முகமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
  • வருடாந்த அபிவிருத்தி திட்டங்களில் நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை முறையாக மக்கள் சேவைக்காக மக்கள் மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிடல்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மத்திய மாகணத்தில் குறிப்பிட்ட துறைகளில் அபிவிருத்திக்காக தேவையான பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்.
  • அமைச்சின் வினைத்திறன் செயற்பாடுளை நடைமுறைப்படுத்துவதிலும் அமைச்சின் கீழ் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் நடைமுறைபடுத்த உதவி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  • நெநோதா நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும்
  • கல்வி திணைக்களத்தின் கீழ் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களில் செயற்பாடுகளை வழிநடாத்தல், மேற்பார்வை மற்றும் பிண்ணூட்டல்.
  • மக்கள் நீர் வினியோக திட்டங்களை நடைமுறைபடுத்தல், வழிநடத்தல், மேற்பார்வை மற்றும் பிண்ணூட்டல்.
  • முன்பிள்ளை அபிவிருத்தி அலகை உருவாக்கல் மற்றும் நடைமுறைபடுத்தல், மேற்பார்வை மற்றும் பிண்ணூட்டல்.

கணக்கு பிரிவு

  • வருடாந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக அமைச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக திணைக்களங்கள், சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மத்தியில் பகிர்ந்தளித்தல்.
  • மூலதன மற்றும் மீண்டெழும் செலவுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
  • கொடுப்பனவு நடவடிக்கைகள்
  • கொள்முதல் நடவடிக்கைகள்
  • கணக்கு குழுவின் குறித்த அறிக்கைகளை தயார் செய்தல் மற்றும் தகவல் வழங்குதல்.
  • ஐய வினாக்களுக்கு விடையளித்தல்.
  • அறிக்கைகள் தயாரித்தல்
  • களஞ்சியப்படுத்தல்

Educational Servicesகல்வி பிரிவு

கல்வி துறையுடன் தொடர்புடைய ஆசிரியர் சேவை/ அதிபர் சேவை/ கல்வி நிர்வாக சேவை/ மற்றும் கல்வி சாரா பணியாளர்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்.

இலங்கை ஆசிரியர் சேவை

  • இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்லோமாதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளல்.
  • ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைபடுத்தல் மற்றும் மேற்பார்வை.
  • பதவி உயர்வு செயற்பாடுகளின் போது கல்வி காரியாலயங்கள் ரீதியாக நடைபெறும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல் மற்றும் வழிநடாத்தல்.
  • தேசிய மற்றும் மாகாணங்களுக்கிடையில் பாடசாலைகளுக்கு இடமாற்றல் கடமைகள்.
  • சேவையில் இருக்கும் போது பட்டப்படிப்பை முடித்தால் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கல்.
  • சேவையில் இருக்கும் போது ஆசியரியர் பயிற்சி பெற்றோருக்கு நியமனம் வழங்கல்.
  • பயிலுனர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனக்கடிதம் வழங்கல்.
  • ஆசரியர்களின் கல்வி விடுமுறை, விடய விடுமுறை, மீள சேவையை நிறுவுதல், ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை

  • இலங்கை அதிபர் சேவை/ இலங்கை கல்வி நிர்வாக சேவை பதவிகளுக்கு இடங்களை நிச்சயித்தல்.
  • சேவையை நீடித்தல், நியமனங்களை நிரந்தரமாக்கல், ஓய்வு பெறச்செய்தல் மற்றும் சிபாரிசுகளை தேசிய அமைச்சுக்கு அனுப்புதல்.
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

மத்திய மாகாண பாடசாலைகளின் கல்வி சாரா உத்தியோகத்தர்கள்

  • பாடசாலை கல்வி சாரா உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளல் கடமைகள்.
  • இடமாற்றம், நியமனத்தை நிரந்தரமாக்கல், பதவி உயர்வு, வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை கடமைகள்.
  • ஓய்வு பெறச்செய்தல்.
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

உள்ளக கணக்காய்வு பிரிவு

பிரதான அமைச்சிற்கு கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக சட்ட ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவதை உறுதி செய்வதற்கு சோதணை மற்றும் பரீட்சிப்புகளினூடாக நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை பாதுகாத்தல்.

கல்வி மற்றும் பிரதான அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்கள், வலய கல்வி காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக அது தொடர்பான பிழைகள் மற்றும் மோஷடி தவிர்த்தலும் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் உள்ளக சோதணைகளின் சரியான தன்மை அல்லது போதிய தன்மை தொடர்பாக தொடர்ச்சியான ஆய்வு மற்றும் சுதந்திரமான மதிப்பீட்டை பேணுதல்..

செயற்பாடுகள்

  • பிரதான அமைச்சின் கீழ் இருக்கும் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் கணக்காய்வுகளை மேற்கொள்ளல்.
  • அவசர சோதணை பரீட்சிப்புகளை மேற்கொள்ளல்.
  • விஷேட விசாரனைகளை மேற்கொள்ளல்.
  • ஓய்வு பெறும் உத்தியோகத்தர்களின் உரித்து வெகுமதிகள் சான்றிதழை வழங்கல்.
  • பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் போது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் ஐய வினாக்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் அறிக்கை வழங்கல்.

வருகைமுன் பிள்ளை அபிவிருத்தி பிரிவு

நோக்கு

“பாடசாலை கல்விக்காக பூரண அறிவு மற்றும் திறமை மிக்க பிள்ளைகளை உருவாக்கல்”

பணிக்கூற்று

முன் பிள்ளை பருவத்தில் உள்ள பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்தலும், உடல் மற்றும் உள ரீதியாக குழந்தையை பலப்படுத்தலும், அதற்காக முன் பிள்ளை அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு அமைய நடாத்தி செல்வதற்கு செயன்முறைகள், நியதிச்சட்டங்கள் தயாரித்தல், அவற்றை நடைமுறைபடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பிரிவின் பணியாகும்.
இப்பிரிவின் பிரதான செயற்பாடுகளாவன;

  1. மாகாணத்தில் முன் பிள்ளை கல்வியை மேம்படுத்தல்.
  2. முன் பிள்ளை அபிவிருத்தி மத்திய நிலையங்களை பதிவு செய்தல் முகாமத்துவம் செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  3. முன் பிள்ளை பருவத்தில் உள்ள சிறுவர்களின் உடல், உள்ளம் உள்ளிட்ட முழுமையான அபிவிருத்திக்கு பொருத்தமான சூழலை உருவாக்கல்.
  4. முன் பிள்ளை பருவத்தில் உள்ள சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து உத்தரவாதம் வழங்கல்.
  5. முன் பிள்ளை பருவ அபிவிருத்திக்கு அவசியம் என கருதப்படும் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

water projectமக்கள் நீர் வினியோகம் மற்றும் துப்பறவாக்கல் பிரிவு

நோக்கு

மத்திய மாகாணத்தில் கிராமிய மற்றும் தோட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர் மற்றும் துப்பரவாக்கல் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தல்.

பணிக்கூற்று

நீர் வினியோகம்இ துப்பரவாக்கல்> சுகாதார கல்வி> கொள்ளளவு அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றுக்கான செயற்திட்டங்களை திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் மற்றும் அவ்வாறான செயற்திட்டங்களின் தொடர்பூட்டல் மற்றும் வழிகாட்டல் ஊடாக கிராமிய மற்றும் தோட்ட பிரஜைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்து பங்கேட்பு அபிவிருத்தி நுழைவின் ஊடாக அபிமானமிக்க மற்றும் எழுச்சிபெற்ற பிரஜைகளை உருவாக்கல்.

பணிகள்

  1. மத்திய மாகாணத்திற்குள் குடிநீர் வசதிகள் மற்றும் துப்பரவாக்கல் வசதிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மக்கள் கரு அமைப்புகளை பதிவூ செய்தல்இ மேற்பார்வை மற்றும் ஒழுங்கமைத்தல்இ தேவையான ஆலோசனை வழங்கல்இ மக்கள் கரு அமைப்புகளின் நிர்வாகத்திற்கு தேவையான சட்ட ஒழுங்கு விதிகள் மற்றும் சுற்று நிரூபங்கள் வெளியிடல்இ மீள் ஒழுங்கமைப்புஇ கழைத்தல் மற்றும் கண்க்காய்வூஇ யாப்பின் படி செயற்பட உதவி வழங்கல்.
  2. மத்திய மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் நீர் வினியோகம் மற்றும் துப்பரவாக்கல் செயற்திட்டத்திற்குள் நடைமுறைபடுத்தப்படும் மக்கள் நீர் வினியோக திட்டத்தை அபிவிருத்தி செய்ய தேவையான வழிகாட்டல்கள் மற்றும் நிதி வழங்கல். மக்கள் கரு அமைப்புகளின் கொள்ளளவூ விருத்திக்காக உதவி வழங்கல் மற்றும் உத்தியோகத்தர் குளாம்இ குழு உறுப்பினர்கள்இ ஊழியர்கள் மற்றும் மக்களை பயிற்றுவித்தல்.
  3. உதவி நிறுவனங்களின் பணிகளை அறிமுகப்படுத்தல் மற்றும் அந் நிறுவனங்களுடன் தேவைக்கேற்ப ஒப்பந்தங்கள் செய்தல்.
  4. மக்கள் கரு அமைப்புகளினால் நடாத்தி பராமரிக்கப்பட வேண்டும் என நியமம் செய்யப்படும் ஏடுகள், கடித காகிதாதிகள் மற்றும் மாதிரி படிவங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அவற்றை பாவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தல்.
  5. மக்கள் நீர் வினியோகம் மற்றும் துப்பரவாக்கல் செயற்பாடுகளை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய செயற்திட்டங்களுக்காக வெளிநபர்களுடன் ஒப்பந்தங்களுக்கு கைச்சாதிடல் மற்றும் தொடர்பூட்டல் செயற்பாடுகளை பேணுதல்.

 

கூட்டுறவு அபிவிருத்தி

cooperative Development and cooperative employee commission கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கூட்டுறவு பணியாளர் திணைக்களம் என்பன பிரதான அமைச்சின் கீழ் இயங்குகின்றன

கல்வி திணைக்களம்

Department of Education கட்டாய கல்வி பெற வேண்டிய வயதில் உள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்குகிறது

காணி திணைக்களம்

housing_construction services மத்திய மாகாணத்தில் கட்டுப்பாடு மற்றும் அனைத்து அரச நிலங்களை முறையான நிர்வாகம் நடத்துகிறது

எங்களை தொடர்பு

Reach us மாகாண சபை கட்டிடத்
பல்லேகல,
குண்டசாலை, 20168
இலங்கை

Go to top