Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்
සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

Homeசேவைகள

Our Services

Housing Development Services

Housing Development ServicesThe Ministry grants material and financial aids to the low income families of central province to construct permanent houses.

Implemented programmes

  1. Granting of Asbestos sheets
  2. Rs 50000/- housing loan programme
  3. Implementing Awareness programmes about "Construction of low cost houses"

Qualification required for applying assistance of Rs 50000/- Housing Loan

  • Applicant must be a permanent resident of relevant divisional secretariat
  • Age between 18 and 55 years ( Maximum age limit is not applicable if you have two permanent public servants as guarantors)
  • If the applicant is unmarried, he/she must be the legal guardian of the family (Must be certified by a Grama Niladhari certificate co-signed by the Divisional Secretary)
  • Being a Samurdhi recipient or low income person (But he/she should have the capability to pay monthly installment and the loan interest )
  • The corresponding land must be owned by the applicant or his/her family
  • Must be certified by a Grama Niladari certificate co-signed by the divisional secretary that the applicant enjoyed the land for more than 05 years in the case of a government land and having no hindrance giving him the ownership in the future
  • In case of a privately owned land, the current owner must submit a letter to the Grama Niladari expressing his/her willingness to transfer the ownership of the land to the applicant in the future.

Qualification required for applying assistance of asbestos sheets

  • Must be a permanent resident of the relevant divisional secretary’s division
  • Being a Samurdhi/Public charity assisted /low income recipient or a very poor person
  • Being a family unit with married or widowed children
  • Not having roofing material for the house under construction or not having a permanent roof for the current house
  • Applicant must not be a recipient of a similar grant in the past.

Transport Services

  • Maintenance & Construction of Bus stands
  • Construction of passenger shelters
  • Construction of Time Keeper Cabins
  • Registering garages qualified to issue vehicle fitness
  • Duties related to issuing vehicle fitness certificates
  • Activities of monitoring garages

பிரிவினைவாத சேவைகள்

Sectional Servicesநிர்வாகம்

  • ஆட்சேர்பு
  • பதவியேற்றம்
  • நியமனத்தை உறுதிபபடுத்தல்
  • சேவை நீடிப்பு
  • விடுவித்தல்
    ஓய்வு பெறச்செய்தல்
  • வெளிநாட்டு புலமைபரிசில்கள் வழங்கல்
  • அமைச்சு மற்றும் அதற்கு கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகள்
  • வழக்குகளுக்கு தொடர்பாக தோற்றல்.
  • மனித வள அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள்
  • அமைச்சு மற்றும் அதற்கு கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான எல்லா நிர்வாக நடவடிக்கைகளும்
  • நிறுவன மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்பூட்டல்

திட்டமிடல் பிரிவு

  • அமைச்சுக்கு கீழ் வரும் திணைக்களங்கள், சபைகள் மற்றும் அதிகார சபைகளின் அபிவிருத்தி திட்டமிடல்களை நிதியியல் அதிகார சபை மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களின் வழிகாட்டல்களின் படி தயாரிக்க அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுத்தல், நடைமுறை படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் இடையில் திருத்தங்கள் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தல்.
  • ஒவ்வொறு திணைக்களங்களில் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் பின்னூட்டல்.
  • அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைபடுத்தும் போது தர முகமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
  • வருடாந்த அபிவிருத்தி திட்டங்களில் நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை முறையாக மக்கள் சேவைக்காக மக்கள் மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிடல்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மத்திய மாகணத்தில் குறிப்பிட்ட துறைகளில் அபிவிருத்திக்காக தேவையான பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்.
  • அமைச்சின் வினைத்திறன் செயற்பாடுளை நடைமுறைப்படுத்துவதிலும் அமைச்சின் கீழ் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் நடைமுறைபடுத்த உதவி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  • நெநோதா நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும்
  • கல்வி திணைக்களத்தின் கீழ் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களில் செயற்பாடுகளை வழிநடாத்தல், மேற்பார்வை மற்றும் பிண்ணூட்டல்.
  • மக்கள் நீர் வினியோக திட்டங்களை நடைமுறைபடுத்தல், வழிநடத்தல், மேற்பார்வை மற்றும் பிண்ணூட்டல்.
  • முன்பிள்ளை அபிவிருத்தி அலகை உருவாக்கல் மற்றும் நடைமுறைபடுத்தல், மேற்பார்வை மற்றும் பிண்ணூட்டல்.

கணக்கு பிரிவு

  • வருடாந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக அமைச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக திணைக்களங்கள், சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மத்தியில் பகிர்ந்தளித்தல்.
  • மூலதன மற்றும் மீண்டெழும் செலவுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
  • கொடுப்பனவு நடவடிக்கைகள்
  • கொள்முதல் நடவடிக்கைகள்
  • கணக்கு குழுவின் குறித்த அறிக்கைகளை தயார் செய்தல் மற்றும் தகவல் வழங்குதல்.
  • ஐய வினாக்களுக்கு விடையளித்தல்.
  • அறிக்கைகள் தயாரித்தல்
  • களஞ்சியப்படுத்தல்

Educational Servicesகல்வி பிரிவு

கல்வி துறையுடன் தொடர்புடைய ஆசிரியர் சேவை/ அதிபர் சேவை/ கல்வி நிர்வாக சேவை/ மற்றும் கல்வி சாரா பணியாளர்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்.

இலங்கை ஆசிரியர் சேவை

  • இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்லோமாதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளல்.
  • ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைபடுத்தல் மற்றும் மேற்பார்வை.
  • பதவி உயர்வு செயற்பாடுகளின் போது கல்வி காரியாலயங்கள் ரீதியாக நடைபெறும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல் மற்றும் வழிநடாத்தல்.
  • தேசிய மற்றும் மாகாணங்களுக்கிடையில் பாடசாலைகளுக்கு இடமாற்றல் கடமைகள்.
  • சேவையில் இருக்கும் போது பட்டப்படிப்பை முடித்தால் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கல்.
  • சேவையில் இருக்கும் போது ஆசியரியர் பயிற்சி பெற்றோருக்கு நியமனம் வழங்கல்.
  • பயிலுனர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனக்கடிதம் வழங்கல்.
  • ஆசரியர்களின் கல்வி விடுமுறை, விடய விடுமுறை, மீள சேவையை நிறுவுதல், ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை

  • இலங்கை அதிபர் சேவை/ இலங்கை கல்வி நிர்வாக சேவை பதவிகளுக்கு இடங்களை நிச்சயித்தல்.
  • சேவையை நீடித்தல், நியமனங்களை நிரந்தரமாக்கல், ஓய்வு பெறச்செய்தல் மற்றும் சிபாரிசுகளை தேசிய அமைச்சுக்கு அனுப்புதல்.
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

மத்திய மாகாண பாடசாலைகளின் கல்வி சாரா உத்தியோகத்தர்கள்

  • பாடசாலை கல்வி சாரா உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளல் கடமைகள்.
  • இடமாற்றம், நியமனத்தை நிரந்தரமாக்கல், பதவி உயர்வு, வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை கடமைகள்.
  • ஓய்வு பெறச்செய்தல்.
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள்.

உள்ளக கணக்காய்வு பிரிவு

பிரதான அமைச்சிற்கு கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக சட்ட ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவதை உறுதி செய்வதற்கு சோதணை மற்றும் பரீட்சிப்புகளினூடாக நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை பாதுகாத்தல்.

கல்வி மற்றும் பிரதான அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்கள், வலய கல்வி காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக அது தொடர்பான பிழைகள் மற்றும் மோஷடி தவிர்த்தலும் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் உள்ளக சோதணைகளின் சரியான தன்மை அல்லது போதிய தன்மை தொடர்பாக தொடர்ச்சியான ஆய்வு மற்றும் சுதந்திரமான மதிப்பீட்டை பேணுதல்..

செயற்பாடுகள்

  • பிரதான அமைச்சின் கீழ் இருக்கும் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் கணக்காய்வுகளை மேற்கொள்ளல்.
  • அவசர சோதணை பரீட்சிப்புகளை மேற்கொள்ளல்.
  • விஷேட விசாரனைகளை மேற்கொள்ளல்.
  • ஓய்வு பெறும் உத்தியோகத்தர்களின் உரித்து வெகுமதிகள் சான்றிதழை வழங்கல்.
  • பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் போது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் ஐய வினாக்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் அறிக்கை வழங்கல்.

வருகைமுன் பிள்ளை அபிவிருத்தி பிரிவு

நோக்கு

“பாடசாலை கல்விக்காக பூரண அறிவு மற்றும் திறமை மிக்க பிள்ளைகளை உருவாக்கல்”

பணிக்கூற்று

முன் பிள்ளை பருவத்தில் உள்ள பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்தலும், உடல் மற்றும் உள ரீதியாக குழந்தையை பலப்படுத்தலும், அதற்காக முன் பிள்ளை அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு அமைய நடாத்தி செல்வதற்கு செயன்முறைகள், நியதிச்சட்டங்கள் தயாரித்தல், அவற்றை நடைமுறைபடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பிரிவின் பணியாகும்.
இப்பிரிவின் பிரதான செயற்பாடுகளாவன;

  1. மாகாணத்தில் முன் பிள்ளை கல்வியை மேம்படுத்தல்.
  2. முன் பிள்ளை அபிவிருத்தி மத்திய நிலையங்களை பதிவு செய்தல் முகாமத்துவம் செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  3. முன் பிள்ளை பருவத்தில் உள்ள சிறுவர்களின் உடல், உள்ளம் உள்ளிட்ட முழுமையான அபிவிருத்திக்கு பொருத்தமான சூழலை உருவாக்கல்.
  4. முன் பிள்ளை பருவத்தில் உள்ள சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து உத்தரவாதம் வழங்கல்.
  5. முன் பிள்ளை பருவ அபிவிருத்திக்கு அவசியம் என கருதப்படும் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

water projectமக்கள் நீர் வினியோகம் மற்றும் துப்பறவாக்கல் பிரிவு

நோக்கு

மத்திய மாகாணத்தில் கிராமிய மற்றும் தோட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர் மற்றும் துப்பரவாக்கல் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தல்.

பணிக்கூற்று

நீர் வினியோகம்இ துப்பரவாக்கல்> சுகாதார கல்வி> கொள்ளளவு அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றுக்கான செயற்திட்டங்களை திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் மற்றும் அவ்வாறான செயற்திட்டங்களின் தொடர்பூட்டல் மற்றும் வழிகாட்டல் ஊடாக கிராமிய மற்றும் தோட்ட பிரஜைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்து பங்கேட்பு அபிவிருத்தி நுழைவின் ஊடாக அபிமானமிக்க மற்றும் எழுச்சிபெற்ற பிரஜைகளை உருவாக்கல்.

பணிகள்

  1. மத்திய மாகாணத்திற்குள் குடிநீர் வசதிகள் மற்றும் துப்பரவாக்கல் வசதிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மக்கள் கரு அமைப்புகளை பதிவூ செய்தல்இ மேற்பார்வை மற்றும் ஒழுங்கமைத்தல்இ தேவையான ஆலோசனை வழங்கல்இ மக்கள் கரு அமைப்புகளின் நிர்வாகத்திற்கு தேவையான சட்ட ஒழுங்கு விதிகள் மற்றும் சுற்று நிரூபங்கள் வெளியிடல்இ மீள் ஒழுங்கமைப்புஇ கழைத்தல் மற்றும் கண்க்காய்வூஇ யாப்பின் படி செயற்பட உதவி வழங்கல்.
  2. மத்திய மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் நீர் வினியோகம் மற்றும் துப்பரவாக்கல் செயற்திட்டத்திற்குள் நடைமுறைபடுத்தப்படும் மக்கள் நீர் வினியோக திட்டத்தை அபிவிருத்தி செய்ய தேவையான வழிகாட்டல்கள் மற்றும் நிதி வழங்கல். மக்கள் கரு அமைப்புகளின் கொள்ளளவூ விருத்திக்காக உதவி வழங்கல் மற்றும் உத்தியோகத்தர் குளாம்இ குழு உறுப்பினர்கள்இ ஊழியர்கள் மற்றும் மக்களை பயிற்றுவித்தல்.
  3. உதவி நிறுவனங்களின் பணிகளை அறிமுகப்படுத்தல் மற்றும் அந் நிறுவனங்களுடன் தேவைக்கேற்ப ஒப்பந்தங்கள் செய்தல்.
  4. மக்கள் கரு அமைப்புகளினால் நடாத்தி பராமரிக்கப்பட வேண்டும் என நியமம் செய்யப்படும் ஏடுகள், கடித காகிதாதிகள் மற்றும் மாதிரி படிவங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அவற்றை பாவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தல்.
  5. மக்கள் நீர் வினியோகம் மற்றும் துப்பரவாக்கல் செயற்பாடுகளை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய செயற்திட்டங்களுக்காக வெளிநபர்களுடன் ஒப்பந்தங்களுக்கு கைச்சாதிடல் மற்றும் தொடர்பூட்டல் செயற்பாடுகளை பேணுதல்.

 

டிபார்ட்மெண்டல் மற்றும் நிறுவனஞ்சார்ந்த சேவைகள்

Powerகல்வி திணைக்களம்

நோக்கு

“அறிவு நற்பண்புகளால் பரிபூரணமான திறன் படைத்த எதிர்க்கால சந்ததியினர்”

பணிக்கூற்று

மாணவர் சமூகத்திற்காக உயர்ந்த தரத்திலான சமனான மற்றும் சாதாரன கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு மலைநாட்டின் கல்வி கட்டமைப்பிற்கு பலமூட்டல்.

பணிகள்

  1. மத்திய மாகாணத்தில் கட்டாய கல்வி வயதெல்லைக்குள் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல்.
  2. வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை இடவசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
  3. மாகாணத்தில் உள்ள மாணவர்களின் உடல் மற்றும் உள ரீதியான அபிவிருத்தி செயற்பாடுகளை அர்த்தமூட்டல்.
  4. மாணவர் நலன்புரி செயற்பாடுகள் மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகளை விருத்தி செய்வதன் மூலம் செயற்திறன் மிக்க மாணவர் சந்ததியினரை உருவாக்கல்.
  5. கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தமது பணியை முறையாகவூம் வினைத்திறனாகவூம் நிறைவேற்ற தேவையான வழிகாட்டல்களை வழங்கல்.
  6. ஆரம்ப வகுப்புகளில் இருந்து உயர் தரம் வரை அனைத்து மாணவர்களுக்கும் மிக வெற்றிகரமான மற்றும் செயற்பாடுகளுடனான புத்தாக்கமிக்க கற்பித்தல் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக பாடசாலைகளுக்கு தரமான வளங்களை தேவையான அளவில் வழங்கல்.
  7. பாடசாலை மாணவர்களின் மொழி திறன் மற்றும் தொழிநுட்ப கல்வியை வளர்ச்சியடைய செய்தல்.
  8. முழு கல்வி செயற்பாடுகளின் பண்புசார் மற்றும் அளவூசார் அபிவிருத்திக்கு அனைத்து     மனித மற்றும் பௌதீக வளங்களை வினைத்திறனாகவும் விளைத்திறனாகவும்     பயன்படுத்தல், வழிநடாத்தல். மேற்பார்வை செய்தல் மற்றும் நிர்வாகம் செய்தல்.

மத்திய மாகாண கல்வி காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகள்

மாவட்டம் வலயங்களின் எண்ணிக்கை தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை மாகாண பாடசாலைகளின் எண்ணிக்கை
கண்டி 06 35 619
மாத்தளை 04 12 311
நுவரெலியா 05 07 543
மத்திய மாகாணம் 15 54 1473


தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 225134
Fax: +94 812 225134
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


மாகாண உள்ளுராட்சி திணைக்களம்

நோக்கு

ணணநல்லாட்சியில் மிகச்சிறந்த நிலமையை அடைந்த நாட்டில் வெற்றிகரமான உள்ளுராட்சி கட்டமைப்பு மத்திய மலைநாட்டிலிருந்து

பணிக்கூற்று

மலைநாட்டு பிரஜைகளின் நலனுக்காக உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை வினைத்திறனாக மற்றும் விளைத்திறனாக நிறைவேற்ற முடியூமான வகையில் நட்பார்ந்த வழிகாட்டல்இ வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் உதவூவதன் மூலம் நல்லாட்சியூடைய வெற்றிகரமான உள்ளுராட்சி கட்டமைப்பை மாகாணத்திற்குள் நிறுவூதல்.

மத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் (Local Government Institutions in the Central Province)

மாவட்டம் பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகள்
கண்டி 11 0 02
மாத்தளை 17 04 01
நுவரெலியா 05 02 01
மத்திய மாகாணம் 33 06 03

பணிகள்

  1. மத்திய மாகாணத்தில் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களின் சொந்த நிறுவன நோக்கங்கள் தொடர்பாக தௌpவான அறிவூடன் தமது அதிகாரத்திற்குள் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதை உறுதி செஅய்து கொள்ளல்.
  2. அரசியல் யாப்பின் 13 உளவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புக்களுக்கு இடையில் உள்ளுராட்சிக்கு தொடர்புடைய அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை பிரயோகித்தல்.
  3. திணைக்களத்துடன் தொடர்புடைய பல்வேறுபட்ட சட்டங்கள்இ கட்டளை சட்டங்கள்இ சட்ட ஒழுங்குகள் மற்றும் சுற்று நிரூபங்களுக்குட்பட்டதாக அதிகாரங்களை பிரயோகித்தல்.
  4. ஒவ்வொறு நிறுவனத்தினாலும் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லைகளை தாண்டி செயற்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.
  5. அரசு மற்றும் மாகாண சபையினால் மேற்கொள்ளப்படும் கொள்கை தீர்மானங்களின் படி உள்ளுராட்சி நிறுவனங்களினால் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என தேடிப்பார்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளல்
  6. உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தேவையான ஆலொசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கல்.
  7. நிதி உதவிகள் (ஊதிய மீள்நிரப்பல்) வழங்குவதை உறுதி செய்தல்.
  8. உள்ளுராட்சி நிறுவனங்களின் ஊழியர் முகாமைத்துவம் தொடர்பான தினைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ளல்.
  9. உள்ளுராட்சி நிறுவனங்களில் உயர் மட்ட விளைத்திறனை பேணுவதற்கு காரணமாக அமையூம் நிறுவன மற்றும் ஊழியர் அபிவிருத்தியை உறுதி செய்தல்.
  10. உள்ளுராட்சி விடயத்துடன் தொடர்புடைய ஆய்வூகள் மேற்கொள்ளல் மற்றும் பயிற்சிகள் மற்றும் கல்வி வழங்ல்.

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 202263
Fax: +94 812 202261
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்

நோக்கு

“மத்திய மலைநாட்டிலிருந்து சிக்கலற்ற அரச காணிகளில் திருப்திகரமான சமூகமொன்று”

பணிக்கூற்று

மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அரச காணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளங்களின் பாதுகாவலராக இருந்து அவற்றை மக்களின் அபிவிருத்தியின் பொருட்டு  பயன்படுத்தும் போது பொருளாதார சமூக மற்றும் சுற்றாடல் காரணிகளை சமநிலையில் பேணும் சிறந்த முகாமைத்துவத்தை பேணிச் செல்லல்.

மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் பிரதான அமைச்சின் விடய பரப்பிற்கு உட்படும் இன்னொரு பிரதான திணைக்களமாவதுடன், அதனூடாக மத்திய மாகாணத்திற்குள் அனைத்து அரச காணிகளும் இதன் பரிபாலிக்கப்படும். பயனுறுதிமிக்க காணி பயன்பாடு குறித்து நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் காரணிகளை பொறுப்புதாரிகளாக முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் ஏற்றுள்ளது. திணைக்களத்தால் நிறைவேற்றப்படும் பணிகளை குறிப்பான 05 விடயங்களினூடாக கோப்பு செய்ய முடியும்.

பணிகள்

  1. காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் படி குடியிருப்பு முன்மொழிவுகளை திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கு கொடுப்பனவு பத்திரங்களை வழங்குவதற்கு மாகாண சபையின் அனுமதியை பெற்றுக்கொடுத்தல்.
    • மாகாண சபைக்கு சொந்தமான அரச காணிகளை தனிநபர்கள் மற்றும் மதஸ்தளங்கள், பொது விடயங்கள், பல்வேறு விடயங்களுக்காக வழங்கும் போது அரசின் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாக செயற்பட மாகாண சபையின் அனுமதியை பெறல்.
    • காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி கச்சேரிக்கு அனுமதி வழங்கல், இறுதி பட்டியலுக்கு அனுமதி வழங்கல்.
    • காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி கச்சேரிக்கு அனுமதி வழங்கல், வசிப்பதற்கு, விவசாயத்திற்கு, கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி நிறுவன மற்றும் அரச தேவைகளுக்காக காணிகளை விடுவித்தல், நீண்டகால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்கல், வருடாந்த ஆணைச்சீட்டு பொருப்பளிக்கும் போது மாகாண சபை அனுமதியை பெறல்.
  2. அரச திணைக்களங்கள், சட்ட அங்கீகாரம் பெற்ற சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தேவையான காணிகளை விடுவித்தல், குத்தகைக்கு வழங்கல் மற்றும் பொறுப்பளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வழிநடத்தல்.
  3. காணி கொடை (விஷேட ஏற்பாடு) சட்டத்தின் கீழ் காணி கச்சேரிக்கு அனுமதி வழங்கல், அகற்ற, பொறுப்பளிக்க அனுமதி வழங்கல்.
  4. மாகாணங்களுக்கிடையிலான காணி அபிவிருத்தி திட்டங்களின் கீழ் வேறு மாகாண சபைகளுக்கு சொந்தமான அரச காணி நிர்வாகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கல்..

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 424463
Fax: +94 812 424463
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

நோக்கு

“உன்னதமான கூட்டுறவூ சமூகமொன்றை உருவாக்குவதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்”

பணிக்கூற்று

“மத்திய மாகாணத்தில் கூட்டுறவு கொள்கைகள் மற்றும் நற்பண்புகளுக்கமைய கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்காக சட்டத்தாலாக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றி கூட்டுறவு அமைப்புக்களில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக வளவாளராக, ஆலோசகராக, உதவியாளராக, இணைப்பாளராக, வழிகாட்டியாக செயற்பட்டு நல்லாட்சிமிக்க கூட்டுறவு சங்க கட்டமைபொன்றை உருவாக்கல்”

கூட்டுறவு முயற்சியாண்மை மத்திய மாகாண அபிவிருத்தி இலக்குகளக்கு மேலும் பங்களிப்பை வழங்குவதற்கு பலமுள்ள துறையாவதுடன் அதற்காக செயற்படுவது கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் நிறைவேற்றப்படுகிறது. மத்திய மாகாணத்தில் 1993 இலக்கம் 04 உடைய (திருத்தப்பட்ட) நியதிச்சட்டத்தின் திருத்தப்பட்ட 1190 இலக்கம் 10 உடைய மத்திய மாகாண கூட்டுறவு சங்க நியதிச்சட்டம், விதிகள் மற்றும் அதன் கீழ் எழும் உப சட்டங்களின் பொறுப்பினூடாக செயற்பட்டு மிகவும் பொறுப்புடனும் கூட்டுறவு கோட்பாடுகளுக்கு அமைவாக செயற்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க திணைக்களம் தயாராக உள்ளது.

பணிகள்

  1. நடைமுறையிலுள்ள திருத்தங்கள் மற்றும் சட்ட ஒழுங்குகளை செயலூக்கத்துடன் இற்றைப்படுத்தல்.
  2. கூட்டுறவு சங்கங்களை பதிவுசெய்தல்.
  3. கூட்டுறவு சங்கங்களில் சட்ட ரீதியான கணக்காய்வுகளை மேற்கொள்ளல்.
  4. சட்ட உதவி செயற்பாட்டு கட்டமைப்பொன்றை விருத்தி செய்தல்.
  5. செயலிழந்துள்ள கணக்குகளை முடிவுறுத்தல்..

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 201840
Fax: +94 812 201757
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Web: www.coopdept.cp.gov.lk

 


மாகாண கலாசார திணைக்களம்

நோக்கு

கலை கலசாரங்கள் மற்றும் வரலாற்றுமுக்கியத்துவமிக்க உரிமைகளை பாதுகாக்கும் எதிர்கால சந்ததியினர்.

பணிக்கூற்று

மத்திய மாகாணத்தில் தொட்டுணரக்கூடிய தொட்டுணரமுடியாத உரிமைகளை பாதுகாத்து, அனைத்துவித கலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சேமநலன்களை வழங்கி, உளவியல் திருப்தி மற்றும் ஆன்மீக நல்லொழுக்கங்களுடன் கூடிய சமுகமொன்றை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பினை வழங்குதல்.

கலாச்சார உரிமைகளை பாதுகாத்து அபிவிருத்தி செய்தலும் கலை மற்றும் கலாச்சார பெறுமதி கொண்ட அறிவு செல்வத்தை பராமரித்து விரிவாக்கம் செய்யுமளவுக்கு பறந்த அளவில் நடைமுறைப்படுத்த கலாசார அழுவல்கள் திணைக்களம், நிலைபேரான பொருளாதார அபிவிருத்தி மற்றும் போஷிக்கப்படக்ககூடிய வளமான கலாச்சார பின்னணி அமைவதற்கு பங்களிப்பு செய்கிறது.

பணிகள்

  1. தொட்டுணரக்கூடிய கலாச்சார உரிமைகளை பாதுகாத்தல்.
  2. தொட்டுணரமுடியாத கலாச்சார உரிமைகளை பாதுகாத்தல்.
  3. பல்துறை கலைஞர்களை பாதுகாத்தல்.
  4. இரசணை திறமையை வளர்த்தல்.
  5. கலை மற்றும் இலக்கிய திறமைகளை வளர்த்தல்.
  6. விழுமியங்களை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்தல்.

தொடர்பு விபரங்கள்

Phone: +94 813 843374
Fax: +94 812 238476
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


மாகாண வர்த்தக வாணிப மற்றும் சுற்றுலா திணைக்களம்

நோக்கு

திருப்திபடைந்த உல்லாசப் பயணிகள் மற்றும் வர்த்தக சமூகத்தைக் கொண்ட மத்திய மலைநாடு.

பணிக்கூற்று

அர்த்தமுள்ள மற்றும் வேகமான பொருளாதார மேம்பாட்டு துறைகளில் முதலீட்டாளர்களுக்கு பொதுத் தன்மையூடனும் சமதன்மையூடையதாகவூம் மற்றும் உற்பத்தித் திறன்மிக்க வசதிகளை வழங்கி இயற்கைஇ கலாசார மற்றும் வரலாற்று உரிமைகளை பாதுகாத்துஇ உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை ஈர்க்கக்கூடிய அதிசிறந்த வலுவூ+ட்டப்பட்ட வர்த்தக சமுகத்தினருடன் திருப்தியூற்ற  மத்திய மலை நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்குதல்.

பணிகள்

  1. வயாபார பெயர் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்பபடுத்தல் மற்றும் அதற்கு தேவையான அறிவு மற்றும் வசதிகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்கு பெற்றுக்கொடுத்தல்.
  2. மத்திய மாகாணம் பூராக பறந்து காணப்படும் வியாபரிகள் அவர்களின் பொருளாதார நோக்கங்களுக்கு அமைவாக பிரதேச செயலாளர் காரியாலய மட்டத்தில் ஒன்றுகூட்டலும், வலுவூட்டவும்.
  3. மனிதவள அபிவிருத்தி
  4. சுற்றுலா துறையின் மேம்பாட்டிற்காக கீழ்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
  5. வர்த்தக வாணிப மற்றும் சுற்றுலா துறையின் குறித்த உருவாக்க அபிவிருத்திகள்.
  6. வர்த்தக வாணிப மற்றும் சுற்றுலா துறையில் சேவையில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி மற்றும் வழிகாட்டல்கள் வழங்கல்.
  7. முதலீட்டு வாய்ப்புகளை அபிவிருத்தி செய்தல்
  8. தகவல் வழங்கலை விருத்தி செய்தல்.

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 3887118
Fax: +94 812 3887118
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


மாகாண பொறியியலாளர் திணைக்களம்

நோக்கு

"மலைநாட்டின் அபிவிருத்தியில் பொறியியலின் பலம்"

பணிக்கூற்று

மலைநாட்டின் வணப்பையூம் பாரம்பரியத்தையூம் பாதுகாக்கும் கட்டிடக்கலைஇ பொறியியல் நிர்மானம் மற்றும் திட்டமிடல்கள் மூலம் பெருமைக்குறிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு நவீன தொழிநுட்பவியல் ஆலோசணைகள் மற்றும் சேவைகளை வழங்குதல்.

பணிகள்

  1. சோதிட விஞ்ஞான அடிப்படையிலான கட்டட திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்களை வழங்கல், அவற்றை மேற்பார்வை செய்தல், நிதி நடவடிக்கைகளின் முகாமைத்துவம்.
  2. மத்திய மாகாணத்தில் உள்ள பொறியியலாளர்களுக்கு, பொறியியல் துறையுடன் தொடர்புடைய கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கல்.
  3. மத்திய மாகாணத்தில் நடைபெறும் நிர்மாணங்களுக்காக திரவிய பரிசோதணை மற்றும் தர பராமரிப்பை மேற்கொள்வதற்கு தேவையான ஆய்வுகூட வசதிகளை வழங்கல்.
  4. மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக ஆலோசனைகள் வழங்க.

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 205581
Fax: +94 812 205581
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


மாகாண கூட்டுறவு பணியாளர் ஆணைக்குழு

நோக்கு

"மத்திய மலைநாட்டிலிருந்து ஒழுக்கத்தை மதிக்கும் உன்னதமான கூட்டுறவூ சமூகமொன்று."

பணிக்கூற்று

வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய சட்ட ஏற்பாடுகளை வலுவூட்டுவதன் மூலம் மத்திய மாகாணத்தில் ஊழியர்களின் நிர்வாகத்தை முறைமைபடுத்தல் மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மூலம் மிகவூம் திருப்தியூற்றஇ ஒழுக்கத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவதற்கு பங்களிப்பினை வழங்குதல்.

பணிகள்

  1. கூட்டுறவு ஊழியர்களை இணைத்துக்கொள்ளல், பதவி உயர்வு வழங்கல், ஒழுக்காற்று செயன்முறைகளை உருவாக்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை விசாரித்தல்.
  2. கூட்டுறவு பணியாளர்களின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை தீர்மானித்தல்.
  3. ஆணைக்குழு தீர்மானங்களை பலப்படுத்தல்..

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 220102
Fax: +94 812 224247
Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Web: www.coopemp.cp.gov.lk

 


மத்திய மாகாண நூலக சேவைகள் சபை

நோக்கு

"மத்திய மாகாணத்தில் கற்றல் கலாசாரமொன்றை உருவாக்குதல்."

பணிக்கூற்று

அறிவு மற்றும் தகவல்களை சுதந்திரமாகவூம் தொடர்ச்சியாகவூம் பயன்படுத்தககூடிய சந்தர்ப்பத்தை வழங்குவதன் மூலம் வினைத்திறன்மிக்க மற்றும் விளைத்திறன்மிக்க> செயற்பாட்டுக்கு அத்தியாவசியமான மனிதவள அபிவிருத்தி.

பணிகள்

  1. வாசகர்களுக்கு நூலகங்களில் உச்ச மட்ட சேவையை பெற்றுக்கொள்வதற்கு நூலக நிர்வாகம் தொடர்பான அறிவை பெற்றுக்கொடுத்தல்
  2. அறிவை பகிர்ந்துக்கொள்ளும் நூலக புரிந்துணர்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தல்.
  3. பிரதேச கலாச்சார பெருமைகளை எடுத்துக்காட்டும் நூல்கள், துண்டு பிரசுரங்கள், வாசிக நூல்கள் போன்ற இலக்கிய உரிமைகளை நூலகங்களுக்கு பெற்றுக்கொள்ளலும் பாதுகாப்பு தொடர்பில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்தல், கலந்துரையாடல், ஒன்றுகூடல், கேள்வி பதில் போட்டிகள், பேச்சு போட்டிகள், அதீதிகளின் உறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் மூலம் நூலக அங்கத்துவ விருத்திக்காக செயற்படும் நிறுவனங்களாக மாற்றல் மற்றும் மக்கள் சேவைக்காக தகவல் மையமாக மாற்றல்.

    .

தொடர்பு விபரங்கள்

Phone: +94 812 384032
Fax: +94 812 386169

கூட்டுறவு அபிவிருத்தி

cooperative Development and cooperative employee commission கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கூட்டுறவு பணியாளர் திணைக்களம் என்பன பிரதான அமைச்சின் கீழ் இயங்குகின்றன

கல்வி திணைக்களம்

Department of Education கட்டாய கல்வி பெற வேண்டிய வயதில் உள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்குகிறது

காணி திணைக்களம்

housing_construction services மத்திய மாகாணத்தில் கட்டுப்பாடு மற்றும் அனைத்து அரச நிலங்களை முறையான நிர்வாகம் நடத்துகிறது

எங்களை தொடர்பு

Reach us மாகாண சபை கட்டிடத்
பல்லேகல,
குண்டசாலை, 20168
இலங்கை

Go to top